Sunday, December 7, 2008

கவாலி பாடல்கள்...

கவாலி பாடல்களை தமிழ் சினிமா கேவலப்படுத்திய அளவுக்கு யாரும் செய்திருக்கமாட்டார்கள்... கவாலி பாடல்கள் உள்ளத்து மகிழ்ச்சியை ஒரு சோகத்தோடு தருபவை.. மகிழ்ச்சியை எப்படி ஒரு சோகம் சார்ந்த தன்மையோடு வெளிப்படுத்த முடியும் என்கிறீர்களா... எதையும் கடந்த நிலை என்பது , உணர்வு சாராமல் தானே இருக்க முடியும்..

நுஸ்ரட் ஃபடெ அலி கானின் இரு அருமையான கவாலி பாடல்கள் கீழே..

.






எனது வலைப்பூ இசை தொடர்பாகவே இருக்கிறது என்பது பல நண்பர்களின் விமர்சனமாக இருக்கிறது...யாரும் அறியா மற்றொரு எனது முகம் இது, இசையிலும்... இயற்கை சார்ந்த விஷயங்களிலும் நான் என்னை இழந்துவிடுகிறேன். முடிந்த வரை மாற்று விடயங்களையும் பதிக்க இனி முயல்கிறேன்...

Friday, December 5, 2008

அரபிய இசையின் அற்புதமும் ... டயானா ஹதாத்தின் மூக்கு அழகும்

அது 1990 களில் ஒரு வருடம்.. நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த காலகட்டம்... 3ம் வருடம் .. நம்மள மாதிரி எதைப் பற்றியும் கவலைப்படாத யாரையும் மதிக்காத ஆட்களுக்கென்று ஒதுக்கப்பட்ட “மாப்பிள பெஞ்ச் “ என்று செல்லமாக அழைக்கப்படும் வகுப்பின் கடைசி இருக்கையில் நான் ஒரு ஓரமாக அமர்ந்து ... வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த போது தான் லட்சுமனன் என அழைக்கபடும் ஒரு லெக்சரர் கம்ப்யூட்டரில் இண்டர்பேசிங் பற்றி கிளாஸ் எடுத்துக் கொண்டு இருந்தார்...னமக்கு அந்த கருமம் எல்லாம் தேவை இல்லை என்பதால் நான் வெளி உலகோடு இண்டர்பேஸ் ( தொடர்பு) கொண்டிருந்தேன்... பாதி தூககம் வேறு... நன்றாக நியாபகம் இருக்கிறது திடீரென நான் இரு கைகளையும் உயர்த்தி ஆட்டியவாறு சத்தம் போட்டு பாட ஆரம்பிக்கிறேன்... கலேத் -ன் அராபிய பாடல் “ தி தி... எ தி தி...தி தி திவாஹ்ம்.. எ தி தி...” வகுப்பு அமைதியாக என்னை திரும்பி பார்க்கிரது...

லட்சுமணன் கேட்கிறார் “ ஏங்க வா* என்ன பண்ணறீங்க

வா : தெரில .. பாட்டு பாடறேன்...

லட் : கெட் அவுட் ஆஃப் மை கிளாஸ்

வா : ஃபார் திஸ் செஷன் ஒன்லி ஆர் ஃபார் எவர்

லட் ; இட்ஸ் யுவர் விஷ்..

வா ; இஃப் இட்ஸ் மை விஷ்.. தென் டோண்ட் ஆஸ்க் மீ எனிதிங் சில்லி ..

லட் ; யூ மே ஹேவ் அன் என்குயரி

வா ; பார்க்கலாம்...ரியலி ஐ நீட் அ கப் ஆஃப் காஃபி... ஐ யம் லீவிங்..

நான் வெளியேறும் போது பக்கத்தில் இருக்கும் நாராவை.. வாடா இவன் எடுக்கிர லெக்சர என்னமோ புரிஞ்சுகிற மாதிரி தலைய தலைய ஆட்டி கேட்கிற.. கிளம்பு கேண்டீனுக்கு என்று அவனையும் இழுத்துக் கொண்டு வகுப்பை விட்டு வெளியேறும் போதும் “ தி தி... எ தி தி...தி தி திவாஹ்ம்.. எ தி தி...” என்று பாடிக்காட்டி லட்சுமணன் ” இது அரேபியன் சாங்... “ நல்ல இருக்கா என்று கேட்டது இன்றும் என் நினைவில் இருக்கு...

இப்படி அராபிய இசை மற்றும் பாடல்கள் எனது சிறு வயதிலேயே என்னை ஈர்த்துள்ளன... தமிழக நாட்டுப்புறப் பாடல்களைப் போன்றதே அராபிய இசை.... இந்திய கிளாசிகல் இசை அனித்தும் சுருதி லயம் தாள்ம் மயிறு மண்ணாங்கட்டி என்று கூறி நம்மை போல சாதரண இசை ரசிகர்களை தன் பக்கம் வரவிடாமல் தடுக்கும் தன்மை கொண்டவை...

ஆனால் அராபிய பாடல்கள் நம்ம நாட்டுப்புற இசை மாதிரி ... சும்மா பூந்து விளையாட வேண்டியது தான்... ஒரு வேளை அது தான் என்னை ஒரு அராபிய இசை ரசிகனாகியதோ தெரியவில்லை....

”தி தி... எ தி தி...தி தி திவாஹ்ம்.. எ தி தி...” பாட்ட கீழ பிளே செஞ்சு கேளுங்க.. இது 1990 மிகவும் புகழ் பெற்ற பாடல்.. இந்த மெட்டை தழுவி இந்தி மற்றும் தமிழ் பாடல்கள் வந்துள்ளன.. இந்த பாடல் அராபிய பாடகர் கலேத் பாடியது..





இதற்கு பின் நிறைய அராபிய பாடல்களை கேட்கத் துவங்கினேன்... அப்போ நம்ம கவர்ந்த ஃபிகர் தான் டயானா ஹதாத்... என்ன ஒரு ஸ்டைல்.. கரகரப்பான காந்தக் குரல்.. நம்ம ஊரு ஐஷ்வர்யா ராய் எல்லாம் டயானா வோட மூக்கு அழகிற்குக் கூட இணை கிடையாது... அட அட ...அன்பே டயானா.. உன் மூக்கு அழகு அப்படியே என்னை கொல்லுதுடி... கலெத் மற்றும் டயானா ரெண்டு பேரும் சேர்ந்து பாடிய பாடலை கீழ ப்ளே செஞ்சு ..கேளுங்க... பாருங்க...