Monday, April 27, 2009

டெண்ட்டை அகற்றாதீர்கள்...கலைஞர் மறுபடியும் வருகிறார்

இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று காலை திடீர் உண்ணவிரத நாடகத்தை அரங்கேற்றிய கலைஞர்.. உடனடிப் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது என உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னதின் பேரில்... சாகும் வரை உண்ணாவிரதத்தைப் பாதியில் முடித்துக் கொண்டு மத்யான சோத்துக்கு வீட்டுக்குச் சென்றுவிட்டார்...

ஆனால், இலங்கை அரசு போர் நிறுத்தமல்ல... தாக்குதலுக்கு கனரக ஆயுதங்களையோ , விமானப்படையையோ பயன்படுத்த மாட்டோம்,புலிகளின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்றவே படையினர் ஈடுபடுத்தப்படுவர் என அறிவித்துள்ளது. ஆனால், இந்த உறுதி மொழியையும் கலைஞர் உண்ணாவிரதத்தைக் கைவிட்ட உடன்...இலங்கை அரசும் கைவிட்டுவிட்டது...

புலிகளின் சமாதான செயலக இயக்குனர் புலித்தேவன் அவர்கள் ,இன்று மதியம் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக கூறி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்த 20 நிமிடங்கள் கழித்து முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் உள்ள இடங்களைக் குறி வைத்து இரண்டு போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளன, மீண்டும் 1.10 மணிக்கு மற்றொரு தடவை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது, எனக் கூறியுள்ளார்.

தான் இடும் வேடமெல்லாம் , நாடகம் முடிந்து கலைக்கப்படும் ஒப்பனை போல , மக்கள் மத்தியில் கலைந்து போனாலும்.... சளைக்காமல் தொடர்ந்து நாடகமிடும் கலைஞரின் விடா முயற்சி பாராட்டுக்குரியது.

.

Tuesday, April 21, 2009

கொங்குநாட்டு கும்மாங்குத்து

உள்ளூர் கோவில் திருவிழா என்றாலே ... தமிழ்நாட்டுக் கிராமத்தை கனவிலும் கண்டிராத நகர்ப்புற வாசிகளுக்கு நினைவுக்கு வரக் கூடிய ஒன்று..... வண்ணக் காகிதங்கள் கட்டி... தொப்புள் தெரிய தாவணியும்... ஒரு இன்ச் தடிமனுக்கு மேக்கப் இட்ட பெண்டிரும்... பஞ்சகச்சம் வேட்டி கட்டி தலைப்பகை கட்டிய ஆண்களும் சூழ கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் காதலைத் தெரிவித்தோ... அல்லது காதலை எப்படியாவது கரை சேர்த்துவிடு தாயே என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டோ பாடிக் குத்தும்... கும்மாங் குத்து ஆட்டம்...

ஆனால் யதார்த்தம் அப்படியா... இதோ உங்களுக்காக... கொங்கு நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் கோவில் சாட்டி... பூக்கம்பம் நட்டு... அதை சுற்றி ஆடும் ஒரிஜினல் கிராமத்து ஆட்டம்...

Monday, April 20, 2009

கண்ணிருந்தும் குருடர்களாய்... சர்வதேச சமூகம்

ஈழத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தவேண்டும் எனவும், பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் எனவும், தியாகி திலீபன் வழியில் பிரித்தானிய பாராளுமன்றம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் பரமேஸ்வரன் அவர்கள் சர்வதேசத்திற்கும் தமிழினத்திற்கும் விடுக்கும் வேண்டுகோள்...