Thursday, May 27, 2010

யாருக்கு யார் எதிரி?

நகசல் போராளிகளின் போராட்டத்தின் அடிப்படைக் காரனம் குறித்து கவன செலுத்த திட்டவட்டமாக மறுத்துஅவர்களை ஆயுத யுத்தத்தின் வழியிலேயே அடக்குவதை விரும்பும் முகமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக நக்சல்கள் மீது குறைந்த அளவிலான வான் தாக்குதலை நடத்தவும் மத்திய அரசு தயாராகிறது. இதற்கு மக்களிடம் இருந்து வரும் எதிர்வினைகளை குறைக்கவும்... வான் தாக்குதலை நியாயப்படுத்தவும் .. இதனை நியாயப்படுத்தி ஊடகங்களில் கட்டுரையாளர்கள் ஊடாக விவாதங்களையும் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கிறது அரசு.

http://bit.ly/b9aF2B

டைம்ஸ் நவ் ஆங்கில செய்திச் சேனலின் முதன்மை செய்தி ஆசிரியர் கோசுவாமி... தெளிவாகச் சொல்கிறார்... ”இது இந்தியாவுக்கும் அவர்களுக்கும் இடையிலான போர்”. யார் அந்த “அவர்கள்”... மத்திய மற்றும் கிழக்கிந்திய பழங்குடியினர்.

“ இந்தியாவுக்கும் அவர்களுக்கும் இடையிலான” என்ற ஒரு சொற்றொடரில் அடங்கியிருக்கும் செய்தி ... நமக்குத் தெளிவாகச் சொல்கிறது... இது ஒரு ஆக்கிரமிப்புப் போர்...என்பதை... இந்தியா என்பது இனங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் தேசம் என்பதை... இத்துனைக்கும் நக்சல்கள் இனப் போராளிகள் அல்ல... அவர்கள் வர்க்கப் போராட்டம் நடத்துபவர்கள்... ஆனால் அவர்களையும் இனத்துக்குள் கொண்டு அடைக்கும் காரணம் என்ன... எதையும் இன ரீதியாகவே பார்க்கும் கண்ணோட்டம் யாருடையது....

இப்படிக் கட்டப்பட்ட பிரச்சாரத்தின் அடிப்படையில் எழும் விவாதங்கள் எப்படி இருக்கின்றன..

பெரும்பாலான ஊடகங்களில் நக்சல்கள் குறித்த கட்டுரைகளின் பின்னூட்டங்களில் அவர்கள் ஏன் போராடுகிறார்கள் என்ற காரணத்தை ஆராயமல் அவர்கள் ஒழிக்கப் படவேண்டியவர்கள் ... அதற்கு எவ்விதமான பலத்தையும் பிரயோகிக்கலாம் என்ற ரீதியில் வரும் பின்னூட்டங்கள் அதிகம்... இப்படிக் கருத்துக் கூறுபவர்கள் யார் என்ற ஆராய்வது ஒரு பக்கமும்... அவர்களை இந்த மனோநிலைக்கு இட்டுச் சென்ற காரணி எதுவாக இருக்கும் என்பதையும் ...ஈழத்தில் நடந்திய மறைமுக கோர இன அழிப்பு யுத்தத்தை தனது சொந்த மக்கள் மீது இந்த அரசு நடத்தினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்... எதை நோக்கி இந்த ஃபெவிகால் தேசம் பயணிக்கிறது?