Friday, October 22, 2010

ஒரு ராஜா-ஒரு ராணி

-”மில்டொ என்றால் என்ன? உங்களுக்கு எதாவது தெரியுமா?”

-”குதத்தில் கோல் சொருகுபவரின் பெயராக இருக்கலாம்”

-” உங்களுக்கு இன்னொரு வாய்ப்புத் தருகிறேன்“

-” விண்டோசின் புதுப் பதிப்பா“

-” இதற்கு குதத்தில் கோல் சொருகுபவரின் பெயரெனச் சொன்னதே பெட்டர்“

-” அதான் கிழியும் சத்தம் கேட்பதிலிருந்தே தெரிகிறதே “

-” பெட்டர் என்றுதான் சொன்னேன் “

-” சரி- விடு “

-” அது ஒரு அழகான தீவாம்“

-” உன் தொடை இடுக்கை விடவா “

-” சில நுட்பங்களில் என் தொடை இடுக்கு மேம்பட்டது “

-” அது மில்டோவைக் கண்டு வந்த பின் - நான் அளிக்க வேண்டிய சான்றிதழ்“

-”தீவாம் - என்று தான் சொன்னேன் - அது என் கற்பனை “

-” ஓ- கற்பனை தீவுகள் என்றால் பயமெனக்கு“

-” ஏன்“

-” சித்திரக் குள்ளர்கள் சகஜமாக வலம் வருவார்கள்“

-” வரட்டும்“

-” போர் புரிய வேண்டி வந்தால் - எனது விதைப்பைக்கு தனி கவசம் அணிய வேண்டி வரும், வெட்டும் படலாம் “

-” தேவையில்லை “

-” அப்புறம் - நிச்சயம் நான் மண் திங்க வேண்டி வரும்“

-” புரியவில்லை”

-” மண் வாய் - தேன் வாய்- பால் வாய் “

-” மயிர் வாயாகவும் இருக்கலாமல்லவா “

-” அஃப்கோர்ஸ், நான் அதை மிகவும் விரும்புகிறேன் “

-” மில்டோ தேசத்தின் கதவுகள்,,, “

-”தோலினாலானவையா“

-” கற்பனையால் “

-” உடைப்பது மிகச் சிரமமெனச் சொல்“

-”வார்த்தைகளைச் சுழற்று - உன்னால் உடைக்க முடிகிறதா பார்க்கிறேன் “

-” முடிந்தால் “

-” மில்டோவின் அரசன் நீ“


[தொடரும்]

Monday, September 20, 2010

மயில்பாட்டு

தனக்கான பாடல் இல்லாத வருத்தம் தீராமல் அவனின் இனக் கும்பலோர் இறப்பதாக கனவொன்று கண்ட குமரேசன், பாடல் இயற்றிக் கொண்டிருந்தான்.காம தீர சர்வஞான பாடலாக இருக்க வேண்டிய கட்டாயமும், மெட்டுமில்லாததாலும் உருவாவது சிரமாக இருந்தது.அதை விட முக்கியம் கும்பலின் தலைவருக்கும் பிடித்திருக்க வேண்டும்.நடுகற்கள் துவங்கி மாவீரர் துயிலுமிடம் வரையும் , ஆநிரை கவர்தல் முதல் அன்னிய வணிகம் வரையும் குறிப்பெடுத்து வைத்திருந்தான் .இருந்தாலும்,இட்டுக்கட்ட பெருந்திணறல். நேற்று வந்த யவனதேசக் கப்பலின் மாலுமியிடம் , அந்துவஞ்சேரல் இரும்பொறை தனக்கு எழுதிய கடிதம் பற்றி ஃபுக்கோ சொல்லி அனுப்பியிருந்த ஒற்றை வார்த்தையிலிருந்து பாடல் பிரவாகமெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.


பாடலிபுத்திரத்தின் தென் கிழக்கே 200யோசனை தூரத்தில் இருக்கிறது டொமசீன.அசோகரின் படைகள் நகரை முற்றுகையிடும் வரை, அம்மனிதர்களைப் பற்றி துப்பெதுவும் தெரியாது. கடவுளின் குறியிலிருந்து பிடுங்கி வரப்பட்ட மரத்தை நடுவதற்காக , அங்கு வந்துள்ளதாக வேடமிட்டுச் சென்ற உளவாளி சொன்ன பின்பு தான் தெரியும், மார்பு வளர்ந்த ஆண்கள் மாத்திரமே இருப்பது.யாருடன் போரிடுவது என்று குழம்பிய அசோகன், ரயிலேறி அனைவரையும் திரும்பி வரச் சொல்லி விட்டான்.


"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?" -- க்ளியோ ராகமிசைத்துப் பாடியதைக் கேட்ட அந்தோணி , சீசரை உயிர்பிக்க முடிவு செய்து , கிழக்கு திசையில் உள்ள தீவை நோக்கிப் பயணமானான். கடல் நடுவே பூத்துக் கிடக்கும் கொன்றை மரத்தினடியில் தவமிருக்கும் அடுத்த பிறவியிடம் தருமாறு கூறி ,சிறுநீரைக் கொடுத்தனுப்பினாள் க்ளியோ.


தேவராயன் சாமியராகி விட்டதாக ஊரெங்கும் செய்தி பரவிக் கொண்டிருந்த நேரமது.We the people of the Vijaya Nagaram, in order to form a more perfect union, establish injustice, insure domestic tranquility, provide for the common defense, promote the general welfare, and secure the blessings of liberty to ourselves and our posterity, do ordain and establish this Constitution for the Peoples Republic of Vijaya Nagaram. , இதுவே தேவன் எனக்கருளியதாகும். புணரும் போது இதை உச்சாடனம் செய்ய வேண்டும் , இது என் உத்தரவு.மறுப்பவனது பூளை அறுத்தெறியுங்கள். பெண்களின் மார்பகங்களை கிழித்தெறிந்து, தீபம் ஏற்றுங்கள். யோனிமலர்களை அய்ன்ஸ்டீனின் கால யந்திரத்துக்குள் திணித்து துரத்தியடியுங்கள்.குழந்தைகளின் கெண்டை நரம்பை வெட்டி விடுங்கள்.ஆப்பிள் பழம் மட்டுமே சாப்பிடுங்கள்.


பிதாகரஸ் தேற்றம் :

[a+b]2 = a2+b2- 2ab

"ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கம் அதன் மற்ற மூன்று பக்கங்களின் வர்க்கத்தின் கூட்டுத் தொகைக்குச் சமமாகும்."

Thursday, May 27, 2010

இந்தியன் என்பது சாதியா?

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் ... மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி பற்றிய விவரத்தையும் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்திரவிட்டுள்ள இந்நேரத்தில்... சாதிக்கு எதிரான பரப்புரை என்ற பெயரில் rediff.com ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

http://getahead.redi...e-in-census.htm

My caste is Indian என்று பெருமிதமாக கூவச் சொல்கிறது rediff.

அதற்கான காரணமாக அது சுட்டிக் காட்டுவது--- Each time we fill a form that seeks caste details -- be it in education, employment, and elsewhere -- the notion of equality celebrated in our Constitution takes a beating. ------ இந்திய அரசியல் சட்டத்தைத் தான்.

இந்த As per law கோஸ்டிகளுக்கு தெரிந்த ஒரு விடயம் தான்... சமத்துவம் என்பது சமூகத்தின் அடிப்படைத் தன்மையிலிருந்து வர வேண்டும் என்பது... இந்தியாவில் சமூகத்தின் அடிப்படை யான சாதி என்பது ஒழிக்க இயலாத விடயமாக இருக்கிறது... இப்போதைக்கு ஒழிக்கவும் இயலாது... ஆகையால் சமத்துவ சமூக நீதி என்பது என்பது சாதி ரீதியாகத்தானே இருக்க முடியும்... இது rediff க்குத் தெரியாதா.... தெரியும் ..ஆனால் அதன் உள் நோக்கம் ஒரு வேளை சொல்ல முடியாததாக இருக்கலாம்... மேலிடத்துக் கட்டளையாக இருக்கலாம்... சரி கூவுறவங்க கூவட்டும்.... தெரியாத ரகசியமா...

அது ஒரு புறம் இருக்கட்டும்...சாதியை மறுக்க வேண்டும் என்றால்... நான் இந்தியன் என்று தான் கூறிக் கொள்ள வேண்டுமா... சாதியை மறுக்க இந்தியன் என்ற அடையாளம் தான் ஒரே வழியா?????

நீங்க என்ன சொல்லிக் கூவப் போறீங்க????????

யாருக்கு யார் எதிரி?

நகசல் போராளிகளின் போராட்டத்தின் அடிப்படைக் காரனம் குறித்து கவன செலுத்த திட்டவட்டமாக மறுத்துஅவர்களை ஆயுத யுத்தத்தின் வழியிலேயே அடக்குவதை விரும்பும் முகமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக நக்சல்கள் மீது குறைந்த அளவிலான வான் தாக்குதலை நடத்தவும் மத்திய அரசு தயாராகிறது. இதற்கு மக்களிடம் இருந்து வரும் எதிர்வினைகளை குறைக்கவும்... வான் தாக்குதலை நியாயப்படுத்தவும் .. இதனை நியாயப்படுத்தி ஊடகங்களில் கட்டுரையாளர்கள் ஊடாக விவாதங்களையும் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கிறது அரசு.

http://bit.ly/b9aF2B

டைம்ஸ் நவ் ஆங்கில செய்திச் சேனலின் முதன்மை செய்தி ஆசிரியர் கோசுவாமி... தெளிவாகச் சொல்கிறார்... ”இது இந்தியாவுக்கும் அவர்களுக்கும் இடையிலான போர்”. யார் அந்த “அவர்கள்”... மத்திய மற்றும் கிழக்கிந்திய பழங்குடியினர்.

“ இந்தியாவுக்கும் அவர்களுக்கும் இடையிலான” என்ற ஒரு சொற்றொடரில் அடங்கியிருக்கும் செய்தி ... நமக்குத் தெளிவாகச் சொல்கிறது... இது ஒரு ஆக்கிரமிப்புப் போர்...என்பதை... இந்தியா என்பது இனங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் தேசம் என்பதை... இத்துனைக்கும் நக்சல்கள் இனப் போராளிகள் அல்ல... அவர்கள் வர்க்கப் போராட்டம் நடத்துபவர்கள்... ஆனால் அவர்களையும் இனத்துக்குள் கொண்டு அடைக்கும் காரணம் என்ன... எதையும் இன ரீதியாகவே பார்க்கும் கண்ணோட்டம் யாருடையது....

இப்படிக் கட்டப்பட்ட பிரச்சாரத்தின் அடிப்படையில் எழும் விவாதங்கள் எப்படி இருக்கின்றன..

பெரும்பாலான ஊடகங்களில் நக்சல்கள் குறித்த கட்டுரைகளின் பின்னூட்டங்களில் அவர்கள் ஏன் போராடுகிறார்கள் என்ற காரணத்தை ஆராயமல் அவர்கள் ஒழிக்கப் படவேண்டியவர்கள் ... அதற்கு எவ்விதமான பலத்தையும் பிரயோகிக்கலாம் என்ற ரீதியில் வரும் பின்னூட்டங்கள் அதிகம்... இப்படிக் கருத்துக் கூறுபவர்கள் யார் என்ற ஆராய்வது ஒரு பக்கமும்... அவர்களை இந்த மனோநிலைக்கு இட்டுச் சென்ற காரணி எதுவாக இருக்கும் என்பதையும் ...ஈழத்தில் நடந்திய மறைமுக கோர இன அழிப்பு யுத்தத்தை தனது சொந்த மக்கள் மீது இந்த அரசு நடத்தினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்... எதை நோக்கி இந்த ஃபெவிகால் தேசம் பயணிக்கிறது?