எல்லாப் பறவைகளுமே
கழுகின் கண்ணும்
கிளியின் மூக்கும்
மயிலின் தோகையும்
தேடி ஓடுகின்றன...
குயிலின் குரலை
வாங்கிய சேவலொன்று
படியேறி வந்து புலம்பியது
’நல்ல டிமாண்ட் சார், ரேட் தான் ஜாஸ்தி’
பறக்க ஆசை தான்...
பறப்பது பற்றி பேசும் போதெல்லாம்
றெக்கை குறித்து
விளக்க வேண்டியிருக்கிறது..
உயரம் கூறும் போது தான்
கவலை கொள்கின்றன
இந்த பறவைகள்
இட்ட முட்டைகள்
இங்கே தான் இருக்கின்றன...
ரைட்டும் லெப்ட்டும்
ஸ்ட்ரைட்டுமே திசைகளாய்
பதிக்கப்பட்ட குஞ்சுகள் உறையும்
அக்மார்க் முட்டைகள்...
றெக்கைக்கு உறையிட்டு வெளி வந்த குஞ்சொன்று
பைக் உதைத்துக் கடந்தது
நிறமற்ற நாயும் பின் சென்றது.....
சம காலத்தின் மீதான அடி...
ReplyDelete