இருள் நிறைந்த கிணறொன்று
தேவதைகளால் நிறைந்து வழிவதாகவும்
நடந்து வந்த பாதையில்
கிடந்ததாய் சொல்லி
தேவதைகளின் இறகொன்றை
கொடுத்துச் சென்றாள்...
நிலவிழந்த இரவில்
தென்னை மரங்கள் அடர்ந்த
அக்கிராமத்து வீதியில் சில கிழவர்கள்
அதைப் போன்ற இறகை
தலைக்கு வைத்து
உறங்குவதைக் கண்டேன்...